டாப் 10 தமிழ் மூவிஸ் 2017

டாப் 10 தமிழ் மூவிஸ் 2017

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஒரு வருடத்திற்கு 150க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. இதில் சில படங்கள் எதிபார்பே இல்லாமல் வெற்றியை பெறுகின்றது, சில படங்கள் எதிர்பார்ப்புடன் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெறுகின்றது.இன்னும் சில படங்கள் மிக பெரிய தோல்வியை பெற்று செல்கின்றன.இவை அனைத்திலும் மிக சில படங்கள் தான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெயர் பெறுகின்றன.

அப்படி இந்த வருடம் வெளியான சில வெற்றிப் படங்கள்.

குற்றம் 23

இந்த வருடத்தின் மார்ச் மாதம் வெளியான இந்த படம் மக்கள் மற்றும் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இப்படத்தின் வெற்றிக்கு இப்படத்தின் திரைக்கதை ஒரு முக்கிய காரணம்.

மாநகரம்

இந்த வருடத்தில் மார்ச் மாதம் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றிக்கு திரைக்கதையும்,நடிப்பும் முக்கிய காரணம்.

மீசைய முறுக்கு
இந்த வருடத்தில் ஜூலை மாதம் வெளியான இந்த படம் இளைஞர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

விக்ரம் வேதா
ஜூலை மாதம் வெளியான இப்பாடம் இந்த வருடத்தின் ஒரு சிறந்த படம் என்றே சொல்லலாம். இப்படத்தல் நடிப்பு, திரைக்கதை, இசை,வசனம் என அனைத்தும் இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

தரமணி
ஆகஸ்ட் மாதம் வெளியான இந்த படம் ஒரு வித்தியாசமான கதை களத்தாலும் அருமையான பின்னணி இசையினாலும் நல்ல வரவேற்பை பெற்றது.

துப்பறிவாளன்
செப்டம்பர் மாதம் வெளியான இந்த படம் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.மிஷ்கினின் நேர்த்தியான திரைக்கதையும்,விஷாலின் வித்யாசமான நடிப்பும் ஆரோலின் பின்னணி இசையும் இப்படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.

மெர்சல்
அக்டோபரில் வெளியான இந்த படம் இந்த வருடத்தின் மிக பெரிய வெற்றி படமாக வந்துள்ளது.இந்த படத்தில் இடம்பெற்ற சமூக கருத்துக்கள் இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.
அறம்
சமீபத்தில் வெளியான இந்த படம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கோபி நயினாரின் திரைக்கதையும்,சாட்டையடி வசனங்களும் இப்படத்தின் மிக முக்கிய காரணம்

தீரன் அதிகாரம் ஒன்று
உண்மை சம்பவத்தை எடுக்கப்பட்ட இந்த படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.வினோத்தின் அருமையான திரைக்கதை இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

மேலும் அவள்,குரங்கு பொம்மை,கவன்,கடுகு,மரகத நாணயம்,பா.பாண்டி போன்ற படங்களும் இவற்றில்
இடம்பெறும்.

இதில் ஏதேனும் படம் விட்டு போயிருந்தால் அந்த படத்தின் பெயரை இங்கு கமெண்ட் பண்ணவும்.

No comments