மெர்சல் படம் பார்த்து கடுப்பாகிய தெலுங்கு ரசிகர்கள்

இந்நாள் வரை எந்த தமிழ்படமும் செய்யாத வசூல் சதனையினை தளபதி விஜய்யின் மெர்சல் படம் செய்துள்ளது.

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் ‘மெர்சல்’. வெளியாகும் முன்பே பல தடைகளை கடந்து வந்த மெர்சல் படத்திற்கு விஜய் பேசிய சாட்டையடி அரசியல் வசனங்களால் மீண்டும் அரசியல் ரீதியாக விமர்சனங்களுக்கு உள்ளானது.

இருந்த போதிலும் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த பரபரப்பே மெர்சல் படத்தின் வசூலை மேலும் அதிகரித்தது. இது ஒருபுறம் இருக்க, சில அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு என்ற பெயரில் இப்படத்துக்கு விலையில்லா விளம்பரங்கள் செய்தனர்.

இதன் விளைவாக எந்த தமிழ் படமும் இதுவரை செய்யாத வசூல் சாதனையை, விஜய்யின் மெர்சல் படம் செய்துள்ளது. இதுவரை இப்படம் உலகம் முழுதும் ரூ. 225 கோடிகளை வசூலாக குவித்துள்ளது. அதில், அதிவிரைவாக ரூ. 200 கோடி வசூலை எட்டிய முதல் தமிழ் படம் என்ற புதிய சாதனையும் படைத்துள்ளது.

இதை தவிர, அமெரிக்காவில் ரஜினி படம் இல்லாத அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையும், சென்னையில் மட்டும் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என பல்வேறு சாதனைகளை முறியடித்து அனைவரையும் மெர்சலாக்கியுள்ளது விஜய்யின் மெர்சல் படம்.

மேலும் மெர்சல் படத்தின் தெலுங்கு பதிப்பை பார்த்த ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் வந்த ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பற்றிய வசனங்களுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது.

தெலுங்கு பதிப்பான அதிரிந்திக்கும் எதிர்ப்பு கிளம்பியது.அக்டோபர் 27ம் தேதி வெளியாக வேண்டிய படம் பிரச்சனைகளால் நவம்பர் 9ம் தேதி ரிலீஸானது.

அதிரிந்தி படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பற்றிய கருத்துகளை மியூட் செய்யப்பட்டுள்ளதால் இந்த படம் பார்ப்பதற்கு ஊமை படம் போன்று இருக்கிறது என்று படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் தெலுங்கில் இப்படத்திற்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

Tags: mersal , mersal in telugu , thalapathy vijay , adhirindhi

No comments