ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு காரணம் விஜயின் மெர்சல்.

ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு காரணம் விஜயின் மெர்சல்.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுகமான வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே நாடு ஒரே வரி என்று மாற்றப்பட்டது.இந்த வரி 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது.

178 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த வரியை குறைப்பதற்கு காரணம் தளபதி விஜய் அவர்கள் ஜிஎஸ்டி பற்றிய கருத்துக்களை மெர்சல் படத்தில் பேசியாதாள் தான் என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட ஆரம்பித்து விட்டனர்

ஜிஎஸ்டி வரி அமல்படுத்தபட்ட பிறகு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் வாயிலாக பல்வேறு பொருட்களின் வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அப்படித்தான் 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அசாமின் தலைநகரான கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற போது 178 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி வரி பற்றிய வசனங்கள் விஜய் நடித்த மெர்சல் படத்தில் இடம் பெற்றது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

நேற்று நடந்த வரி குறைப்பு அறிவிப்பையும், மெர்சல் படத்தின் வசனத்தையும் முடிச்சு போட்டு விஜய் ரசிகர்கள் நேற்றே ஒரு பரப்புரையை ஆரம்பித்துவிட்டார்கள்.
என்ன தான் இருந்தாலும் ஜிஎஸ்டி பற்றி திரையில் கருத்து சொல்ல தளபதியை தவிர்த்து யாரால் முடியும்.

மேலும் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 70க்கும் மேற்பட்ட பொருட்களின் ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.


Tags: mersal , mersal issue , GST issue

No comments