விழுந்தது கீர்த்தி சுரேஷ் இல்லை.இந்த நடிகை தான்.

தமிழ் சினிமாவில் தான் நடித்த குறைந்த படங்களின் மூலமாகவே முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நல்ல நிலையில் உள்ளர்.இவருக்கு எந்த அளவிற்கு ரசிகர் கூட்டம் இருக்கிறதோ அதே அளவிற்கு இவரை மீம்ஸ் போட்டு களாய்ப்பதற்கு ஒரு கூட்டம் இங்கு உள்ளது.இவரின் நடிப்பை ஓவர் ஆக்ட்டிங் என்று சொல்வது தான் அவர்கள் வேலை. எப்படி இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை கலக்கி கொண்டிருப்பது கீர்த்தி சுரேஷ் தான்.

தமிழில் ரஜினி முருகன், ரெமோ படங்களின் மூலம் அதிக ரசிகர்களை பிடித்தார் கீர்த்தி சுரேஷ், அடுத்து தானா சேர்ந்த கூட்டம்,சண்டக்கோழி-2,சாமி-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை கருவாக வைத்து எடுக்கின்ற படத்தில் நடித்து கொண்டு வருகிறார் என்றும் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் இப்படப்பிடிப்பில் கீழே விழுந்து விட்டார் என்றும் ஒரு தகவல் பரவ ஆரம்பித்தது.அதனை தொடர்ந்து இந்த  வீடியோவும் வைரலானது.இந்த வீடியோவும் தெளிவாக இல்லாததால் மக்களில் பலர் இதனை நம்பி விட்டனர்.

பிறகு இந்த நிகழ்வை பற்றி விசாரிக்கையில் தான் தெரிய வந்தது அது கீர்த்தி சுரேஷ் இல்லை என்று. இந்த சம்பவம் நடத்துள்ளது மலையாள படத்தின் படப்பிடிப்பில். லிண்டா குமார் என்ற நடிகை தான் படப்பிடிப்பில், பாடல் காட்சிகளில் நடனம் ஆடும் பொழுது வழுக்கி  விழுந்தார் என்பது. இதனை அப்படக்குழு உறுதி செய்துள்ளது
லிண்டா குமாரின் புகைப்படம்:

No comments