மொட்டை ராஜேந்திரன் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
ஸ்டன்ட் நடிகராக இருந்த மொட்டை ராஜேந்திரன் இயக்குனர் பாலாவின் நான் கடவுள் படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர்.முதல்படத்திலேயே ரசிகர்களை தனது நடிப்பால் மிரட்டிய ராஜேந்திரன் அதன் பின்னர் நான் கடவுள் ராஜேந்திரனாக தமிழ் சினிமாவில் பெயர் பெற்றார்.
தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்த இவர் இப்போது பல படங்களில் கமெடிலியலும் பட்டையை கிளப்பி வருகிறார்.தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கில் வெங்கடேஷ், பவன் கல்யாண், மலையாளத்தில் மம்மூட்டி உள்ளிட்ட பிரபல நடிகர்களுடனும் சண்டை போட்டுள்ளார்.
தமிழில், இதுவரை 45 படங்களில் நடித்துள்ளார். மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.அவர் எப்படி நடிக்கனும் என்று அவர் ஆசைப்படுகிறார் என்பதை விட இயக்குநர் அவரை வைத்து எந்த மாதிரியான கதாப்பாத்திரத்தில் இயக்க விரும்புகிறார்களோ அதை பூர்தி செய்கிறார்.

பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இயக்குனர் ராஜேஷ் தான் என்னை காமெடியாக மாற்றினார். அதை தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல பட வாய்ப்புகள் எனக்கு அமைந்தது, அந்த படங்களும் வெற்றியை பெற்றுள்ளது.
நான் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கும் போது அங்கு இருந்த ஒரு தண்ணீர் குட்டையில் விழுந்துவிட்டேன். விழுந்தபிறகு தான் அது ஏதோ கெமிக்கல் கலந்த தண்ணீர் என்றெ தெரிந்தது.
அப்போதிருந்து எனக்கு தலையில் முடியே வளரவில்லை. பிதாமகன் படத்தில் இயக்குனர் பாலாவை சந்தித்தேன். அந்தப்படத்தில் ஒரு சண்டை காட்சியை கொடுத்தார். என்னுடைய வித்தியாசமான தோற்றத்தை பார்த்த அவர் எனக்கு முக்கியமான வில்லன் கதாபாத்திரம் கொடுத்தார். எல்லாமே இந்த மொட்டை கெட்டப்பால் தான் வந்தது என்று அவரே கூறியுள்ளார்.

இன்று இவர் நடிக்காத படங்களே இல்லை என்கிற அளவிற்கு எல்லா படத்திலும் நடித்து வருகிறார். பெரிய நடிகர்களின் படங்களில் கூட ஒரு சில காட்சியாவது தலைகாட்டி விடுகிறார் நடிகர் ராஜேந்திரன்.
Post a Comment