டிசம்பர்30 ல் அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பரிசு.

டிசம்பர்30 ல் அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பரிசு.


தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் ஏதேனும் விழா காலங்கள் வர இருந்தால், அந்த விழா காலங்களை சிறப்பிக்க நிச்சயம் ஏதெனும் ஒரு சிறப்பு திட்டம் காத்து கொண்டு இருக்கும்.
இது போன்ற விழா காலங்களில் தான் பெரிய பெரிய நடிகர்களின் டீசர்,ட்ரைலர், போஸ்டர் மற்றும் படமும் வெளியாகும்.இதன்படி போன தீபாவளிக்கு தளபதி விஜயின் மெர்சல் படம் வெளிவந்து வசூல் வேட்டை நடத்தி தீபாவளியை சிறப்பித்து தந்தது.இப்போது புது வருடம் 2018 வர இருக்கிறது. இதற்காக பலரும் பல ஸ்பெஷல் திட்டங்களை ஏற்பாடு செய்து வைத்திருப்பார்கள்.சிலர் 2018ஐ சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பிளான் செய்து கொண்டு இருப்பார்கள். அந்த வகையில் அஜித் ரசிகர்களுக்காக ஒரு ஸ்பெஷல் தகவலை வெளியிட்டுள்ளனர் ராம் சினிமாஸ் குழுவினர்.

அந்த நற்செய்தியானது, டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணியளவில் அஜித் நடித்த வேதாளம் படத்தை ராம் சினிமாஸ் திரையிட முடிவு செய்துள்ளனராம். இந்த தகவலை ராம் சினிமாஸ் தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.இந்த தகவலை கேட்ட தல ரசிகர்களுக்கு புது வருடத்தை சிறப்பிக்க ஒரு நல்ல திட்டம் கிடைத்து விட்டது என்று நினைக்கிறேன்.

இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யவும்.
மேலும் இது போன்ற சினிமா சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை  உடனுக்குடன் பெற எங்களை பின் தொடரவும்.நன்றி.

No comments