இந்திய அளவில் சாதனை படைத்த விஜய் மற்றும் விஜய் சேதுபதி.
இந்திய அளவில் சாதனை படைத்த விஜய் மற்றும் விஜய் சேதுபதி.
ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் எந்த துறையில் எவையெல்லாம் சிறந்தது என்று உலகெங்கும் கருத்து கணிப்பு நடத்தி அதன் முடுவுகளை வெளியிடுவார்கள். இது அனைத்து துறையிலும் நடக்கும் ஒரு நிகழ்வு தான்.இது போல் எல்லா துறைகளிலும் நடக்கும்.இது போன்ற நிகழ்வில் சிறப்பு பங்கு வகிப்பது என்றால் அது சினிமா துறை தான்.
IMDB என்னும் ஆன்லைன் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது தளத்தில் மக்களின் கருத்துக்கள் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் படங்களின் வரிசையை வெளியிடும்.அது போல் இந்த வருடமும் மக்களின் கருத்துக்களில் அடிப்படையில் டாப் 10 இந்திய படங்களை வரிசைபடுத்தியுள்ளது.
இந்த வரிசையில் இரண்டு தமிழ் படங்களும்,மூன்று தெலுங்கு படங்களும், நான்கு ஹிந்தி படங்களும்,ஒரு மலையாள படமும் இடம் பெற்றுள்ளது.இதில் முதலிடம் தமிழுக்கே..!!
விக்ரம் வேதா:
மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மாபெரும் ப்ளாக் பாஸ்டர் படமாக அமைந்த படம் என்றால் அது விக்ரம் வேதா தான்.இந்த படம் IMDBயில் முதல் இடத்தை பிடித்து இந்த வருடத்தின் சிறந்த படம் என்ற பெயரை பெற்று சாதனை படைத்துள்ளது.
மெர்சல்:
இந்த வருடத்தில் தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்த படம் என்றால் அது மெர்சல் தான்.அட்லி இயக்கத்தில் வெளியான இந்த படம் IMDBயில் 9வது இடத்தை பிடித்து பெருமை சேர்த்துள்ளது.
இந்த தகவலை அந்த நிறுவனம் தனது அதிகார்வபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.இதனை நகைச்சுவை நடிகர் விவேக் படக்குழுவினரை பாராட்டும் வகையில்,
“10 சிறந்த இந்தியப் படங்களில் விக்ரம்வேதா முதலிடம்! பாராட்டுக்கள். மெர்சல் இடம் பெற்றிருப்பதும் தமிழுக்குப் பெருமையே! ”என பதிவிட்டுள்ளார்.
இந்த தகவல் பற்றிய உங்களது கருத்துகளை எங்களுக்கு கமென்டில் தெரிவியுங்கள்.
மேலும் இது போன்ற தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
Post a Comment