எல்லா இடத்திலும் கெத்து காட்டும் அஜித்.

எல்லா இடத்திலும் கெத்து காட்டும் அஜித்.



தற்போது தமிழகத்தில் உள்ள மிக பெரிய நடிகர்கள் என்றால் அது தளபதி விஜய் மற்றும் தல அஜித் மட்டும் தான்.இவர்கள் இருவரும் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார்கள்.

Thala ajith picture in arambam
Thala ajith
இதில் அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற படம் விவேகம். என்ன தான் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். தற்போது மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக விஸ்வாசம் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது தெரிந்ததே.

Thala 58
Thala ajith

இந்த நிலையில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2013ல் வெளியான படம் ஆரம்பம்.இந்த படம் வெளியாகி மா பெரும் வரவேற்பை பெற்றது.இதன் காரணமாக இந்த படத்தினை தீரன் என்ற பெயரில் டப் செய்து கன்னட மொழியில் வெளியீடு செய்திருந்தனர்.இப்படம் அங்கு வெளியாகி இத்துடன் 50 நாட்களை தொட்டுள்ளது..தற்போதும் பல திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று,50நாட்கள் கடந்ததை கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள் #AJITHsDheeraBB50Days என்ற ஹஸ் டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சொந்த ஊரில் வெளியாகும் பல நடிகர்களின் படம் கொஞ்ச நாள் கூட ஓடாத இந்த நிலையில்,வெளி மாநிலத்தில் வெளியாகி 50 நாட்களை எட்டி இருப்பது மற்ற ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

  • இந்த தகவல் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் பண்ணுங்க.

  • மேலும் இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.

.

No comments