விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை தொடர்ந்து நான்காவது நாளாக சந்தித்து தனது கருத்துக்களை கூறி வருகிறார்.கடந்த மூன்று தினங்களாக நிறைய கருத்துகளை ரசிகர்களிடம் தெரிவித்து இருந்தார்.அப்படி அவர் இன்று மேடையில் பேசும் போது ஒரு முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான ஒரு கதையை பகிர்ந்துள்ளார்.
அதாவது, அண்ணாமலை படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பிறகு நானும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் கோயம்புத்தூர் க்கு சென்று கொண்டிருந்தோம்.நான் வருவதை அறிந்த கோயம்புத்தூர் ரசிகர்கள் என்னை புகழ்ந்து பாராட்டினார்கள். இப்படி பண்ணியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் எனக்கு அருகே என்னை விட பெரிய நடிகர் இருக்கும் போது இப்படி பாராட்டியது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இதை உணர்ந்த சிவாஜி இது உனக்கான நேரம் இதனை நீ அனுபவிக்க வேண்டும் என்று கூறினார்.உன்னுடைய உழைப்புக்கு கிடைத்த கூலி என்றும் கூறினார்.
அதற்கு பிறகு நான் சமீபத்தில் கோயம்புத்தூர் சென்றிருந்தேன்.அங்கு செல்வதற்கு முன்பு என்னை கொஞ்சம் தாமாக வரசொன்னர்கள்.ஏனென்றால் எனக்கு முன்னர் ஒரு நடிகர் வர இருப்பதால்,அவருடைய ராசிகர்கள் பலர் அங்கு சூழ்த்துள்ளனர் என்று கூறினர்.அதனால் நான் தாமதமாக சென்றேன் என்று ரஜினி கூறினார்.
ரஜினியின் பேச்சை கேட்ட தளபதி ரசிகர்கள் ரஜினி விஜயை தான் குறிப்பிடுகிறார் என்று அறிந்து கொண்டனர்.பின்பு விஜய் கோயம்புத்தூர் சென்ற வீடியோவை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த தகவல் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் பண்ணுங்க.
மேலும் இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
Post a Comment