சியன் விகரமிற்கு வந்த மிகப்பெரும் சோதனை.

சியன் விகரமிற்கு வந்த மிகப்பெரும் சோதனை.

தமிழ் சினிமாவில் ஒரு தனித்துவம் வாய்ந்த நடிகர் யார் என்று கேட்டால் அதற்கு பதில் நிச்சயமாக சியான் விக்ரமாக தான் இருக்கும்.அந்த அளவிற்கு தனது உடலை வருத்தி நடிப்பவர் இவர்.இவரது படங்கள் கதைக்காக ஓடா விட்டாலும் இவரது உழைப்பிற்கு கண்டிப்பாக நல்ல விமர்சனங்களை பெரும்.அப்படி ஒரு திரை கலைஞன் தான் சியன் விக்ரம்.இவர் தற்பொழுது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.
இவரின் ஸ்கெட்ச் படம் கடந்த பொங்கலுக்கு சூர்யாவின் தான சேர்ந்த கூட்டம் மற்றும் பிரபுதேவாவின் குலேபகாவலி படத்துடனும் வெளியானது என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான்.

விக்ரம் நடித்த ஸ்கெட்ச் திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 29 கோடி வரை வசூல் செய்துள்ளது.இந்த வசூலானது விக்ரமின் மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானது. விக்ரமும் தனது பங்கிற்கு ஒரு மெகா ஹிட் படம் கொடுக்க கடுமையாக உழைக்கும் இந்நேரத்தில் ஸ்கெட்ச் படத்தின் வசூல் இவருக்கு மிக பெரிய சோதனையை கொடுத்துள்ளது.
மேலும் சொல்லபோனல்,இவருக்கு பின்னால் வந்த சின்ன சின்ன நடிகர்களே இந்த படத்தின் வசூலை விட அதிகமாக வசூல் சேர்த்திருக்கிறது. இந்த நிலையில் இவரது படத்திற்கு கிடைத்த இந்த வசூல் தொகை அனைத்து தரப்பினருக்கும் வருத்தத்தை தந்துள்ளது.
இருப்பினும் ரசிகர்கள்,கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகி கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் வருகையை காத்து கொண்டிருக்கின்றனர். இந்த படம் கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்கும் என்பது இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலரை பார்த்தால் தெரிகிறது.

இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..!

  • இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
  • youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.

No comments