அஜித் மூலம் தீனாவிற்கு கிடைத்த அங்கீகாரம்

அஜித் மூலம் தீனாவிற்கு கிடைத்த அங்கீகாரம்.
விஜய் டிவிக்கும் தமிழ் சினிமாவிற்கு ரொம்ப காலமாகவே ஒரு நெருக்கம் இருந்து கொண்டு தான் வருகிறது.ஏனென்றால் ரோபோ சங்கர், சிவகார்த்திகேயன், சந்தானம் என பல நடிகர்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறது.அதே போல் தற்போது விஜய் டிவியில் இருந்து தமிழ் சினிமாவில் கால்வைத்து வளர்ந்து வர இருப்பவர்தான் கலக்கப்போவது யாரு தீனா.

அதேபோல் தனுஷ் தயாரிப்பில் வெளியான பவர் பாண்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார்.இதுவே வெள்ளித்திரையில் முதல் படமாகும்.இந்த படத்தில் இவர் நடித்திருந்த நடிப்புக்கு பல பாராட்டுகள் வந்திருந்தது.
தற்போது தீனாவுக்கு ஒரு பெரிய அதிஸ்டம் அவரை தேடி சென்றுள்ளது. அதுதான்,மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் தீனா ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை நடிகர் தனுஷின் வொண்டர் பார் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

இந்த படத்திற்கு அஜித் from அருப்புக்கோட்டை என்று வைக்கப்பட்டுள்ளது. இதனால் இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இதன் மூலம் அஜித் ரசிகர்கள் டுவிட்டர் முழுவதும் இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த படம் தொடங்குவதற்கு முன்பே செம்ம ப்ரோமோஷன் கிடைத்துள்ளது

இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..!
  • இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.

  • youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.

No comments