விஜயும், அஜித்தும் இந்த விஷயத்தில் ஒண்ணு தான் - கோபிநாத்
பொதுவாக தொலைக்காட்சி தொகுப்பாளர்களை பற்றி யாரும் அதிகம் பேசுவது கிடையாது.என்ன தான் அவர்கள் திரையில் தெரிந்தாலும் அவர்களை நாம் சாதாரணமாகவே கடந்து செல்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்மை ஈர்க்கும் சில தொகுப்பாளர்களும் இருக்கின்றனர்.அப்படிபட்ட தொகுப்பாளர்களில் மிகவும் முக்கியமாணவர் என்றால் அது நீயா நானா கோபிநாத் தான்.இவரது நிகழ்ச்சி முழுமையாக அனைவரும் ரசிக்கும் வகையிலும் சில சமயம் சிந்திக்கும் வகையிலும் இருக்கும்.அப்படி பட்ட ஒரு தொகுப்பாளர் தான் கோபிநாத்.
இவர் தற்போது ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய சினிமா பயணத்தை பற்றி கூறிய போது, அதில் அஜித் விஜயை பற்றி குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நடைபெறும் சினிமா சண்டை தற்போது பெரிய விஷயமாக மாறிவிட்டது. சில நேரங்களில் இவர்களின் சண்டை மிக மோசமாக உருவெடுத்துவிடுகிறது.இது சினிமாவில் இப்படி இருக்க,இதே ஒரு சமூக பிரச்சினை என்றால் இவர்கள் எல்லாம் ஒன்றாக கூடிவிடுவார்கள்.ஊதாரமாக நிறைய இருக்கிறது,குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்தை குறிப்பிடலாம்.
மேலும் நான் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரையுமே பேட்டி எடுத்துள்ளேன் விஜய் அஜித்தை பற்றி கூறுவதும்,அஜித் விஜயை பற்றி கூறுவதும் ஒன்று தான்.இவர்கள் இருவரும் சினிமா என்ற ஒன்றை தாண்டி நல்ல நண்பர்கள்.இவர்கள் இருவருமே ஒருவரை பற்றி ஒருவர் ஒருபோதும் குறை சொன்னது இல்லை. இவர்கள் இருவருமே அவரவர் ரசிகர்களுக்கு உதரணமாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..
- இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
- youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.
Post a Comment