இந்த ஆண்டின் டாப் 10 படங்கள் - Top 10 tamil movies in 2018
இந்த ஆண்டின் டாப் 10 படங்கள் - Top 10 tamil movies in 2018
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஓராண்டுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. ஆனால் அதில் சில படங்களே வெற்றி கோப்பையை தட்டி செல்லுகிறது. இந்தாண்டை பொறுத்த வரையில் ஆண்டின் முதல் பாதியில் மிகவும் சில படங்களே மக்கள் மனதை கவர்ந்துள்ளது. ஆனால் ஆண்டின் இரண்டாம் பாதியில் தரமான பல படங்களை தமிழ் சினிமா கொடுத்துள்ளது. அவ்வாறு இந்தாண்டு வெளிவந்து மக்கள் மனதை கவர்ந்த டாப் 10 தமிழ் படங்கள்.
இந்த வரிசை 1முதல் 10 வரை கிடையாது, பொதுவாக வரிசைபடுத்தபட்டுள்ளது.
வடசென்னை:
வடசென்னையை மையமாக வந்து தனுஷ், அமீர்,ஆண்ட்ரியா,சமுத்திரகணி மற்றும் பல நடிகர்களை கொண்டு வெற்றிமாறனால் இயக்கப்பட்ட படம் வடசென்னை.
96:
மெல்லிய காதலை அழுத்தமாக அனைவரின் மனதுகுள்ளும் எடுத்து செல்லும் எளிமையான காதல் கதையை மையாமக வைத்து விஜய் சேதுபதி திரிஷாவை கொண்டு இயக்ப்பட்ட படம்.
பரியேறும் பெருமாள்:
சாதி வன்கொடுமைகளின் வலியை எளிய முறையில் அனைவரின் ஆழ்மனதுக்குள்ளும் கடத்தும் ஒரு பேராயுதம் இந்த பரியேறும் பெருமாள்.
ராட்சசன்:
சைக்கோ த்ரில்லர் கதைகளத்தை கொண்டு அனைவராலும் ரசிக்க மற்றும் விருப்பக்கூடிய வகையும் மிக நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் உருவாக்கப்பட்ட படம் இந்த ராட்சசன்.
மேற்கு தொடர்ச்சி மலை:
உலகெங்கும் வாழும் நிலமற்ற பல ஏழை தொழிலாளிகளின் வாழ்க்கையை கண் முன்னே கொண்டு வந்து சேர்ந்த ஒரு உலக சினிமா இந்த மேற்கு தொடர்ச்சி மலை.
கடைக்குட்டி சிங்கம்:
குடும்ப கதையை மையமாக கொண்டு கிராம வாசத்துடன் கார்த்தி, சத்திய ராஜ், சூரி மேலும் பல பிரபல நடிகர் நடிகைகளை வைத்து இயக்கப்பட்ட படம்.
மகாநதி:
சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு கீர்த்தி சுரேஷ் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரை கொண்டு எடுக்கப்பட்ட படம்.
2.0:
சங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் உருவான பிரமாண்ட திரை படம் 2.0. இந்த படத்தின் கதையில் சில குறைகள் இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியாக இப்படம் ஒரு ஹாலிவுட்டுக்கு இணையான திரைப்படம்.
சர்க்கார்:
விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் சர்க்கார். படத்தில் சில குறைகள் இருந்தாலும் சமகால அரசியலை எந்த ஒரு பயமுமின்றி வெளியே சொன்னது இந்த படத்திற்கு ஒரு பிளஸ்.
இரும்புதிரை:
மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா நடிப்பில் சைபர் கிரைம் கதைக்களத்தை கொண்டு எடுக்கப்பட்ட திரில்லர் படம்.
Post a Comment