பெண்களை ஏலம் விடும் வினோத சந்தை.
இந்த உலகில் காய்கள் ,பழங்கள் வாங்குவதற்கு,ஆடு மாடு வாங்குவதற்கு இவ்வளவு ஏன் ஆயுதங்கள் வாங்குவதறக்கு கூட சந்தைகள் உள்ளது என நாம் அறிந்திருப்போம்.ஆனால் நீங்கள் பெண்களை வாங்கும் அதாவது மணப்பெண்களை வாங்கும் சந்தையை பற்றி தெரிந்து இருக்கிறீர்களா.ஆமாம், உண்மையாகவே பல்கைரியாவில் மணப்பெண்களை வாங்கும் சந்தை ஒன்று உள்ளது.அதை பற்றிய தொகுப்பு தான் இது.
இந்த சந்தையில் விற்பதற்கு தயாராகும் பெண்கள் மணப்பெண் போலவே அழகான உடை மற்றும் அணிகலன்கள் அணிந்து அந்த சந்தையில் அவர்களுடைய குடும்பத்துடன் வந்து கலந்து கொள்வார்கள்.இந்த சந்தை பல்கைரியவில் சாரா சகோர என்ற இடத்தில் நடந்து வருகிறது.
இங்கு கலந்து கொள்ளும் பெண்கள் தங்களை மிக அழகாக அலங்கரித்து அதிக விலைக்கு போகும் அளவிற்கு தயார்செய்கின்றனர்.இந்த சந்தையில் எல்லா வயத்திலுமான பெண்களை வாங்க முடியும்.எனினும் இளம் வயது பெண்கள் தான் அதிகமாகவும் அதிக விலைக்கு விற்பனை செய்யபடுகின்றனர்.
இங்கு கலந்து கொள்ளும் மாப்பிள்ளை வீட்டார்கள் அல்லது மாப்பிள்ளை தனக்கு பிடித்த பெண்களை தேர்வு செய்வார்கள்,பின்பு அவர்களை தனியாக பேசுவதற்கு கொஞ்சம் அவகாசம் கொடுப்பார்கள்.பின்பு அந்த பெண்ணுக்கு அந்த ஆணை பிடித்திருந்தால் மட்டுமே அந்த பெண் அந்த ஆணுக்கு விற்பனை செய்யபடுவார்.
இந்த சந்தையில் பெண்னையும், ஆணையும் தன்னுடைய பெற்றோர்கள் இல்லாமல் இங்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.இங்கு பெங்களின் விலை ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை நிர்ணயிக்கப்படுகிறது.ஏதோணும் ஒரு பெண்ணை அதிகமான ஆண்கள் திருமணம் செய்ய விரும்பினால் அந்த பெண்ணின் விலை அப்படியே அதிகரிக்கும்.
பல்கைரியாவில் இது போன்று பல இடங்களில் நடந்து வருகிறது.ஏழை குடும்பத்தை சார்ந்த மக்கள் தங்களின் பெண்களை வறுமையில் இருந்து காப்பதற்காக இந்த சந்தையை உருவாக்கியுள்ளனர்.
மேலும் இதுப்போன்ற தகவல்களுக்கு எங்களை பின் தொடருங்கள்.
Post a Comment