ப்ளூ வேல் விளையாட்டிற்கு இறையான மதுரை கல்லூரி மாணவன்

ப்ளூ வேல் விளையாட்டினால் உச்சகட்ட மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்ட மதுரை கல்லூரி மாணவர்.

ப்ளூ வேல் என்னும் ஆன்லைன் விளையாட்டு உலகம் முழுவதும் பரவி வருகின்றது. மேலும் இந்த விளையாட்டினால் உலகில் பல இளைஞர்களும் பள்ளி மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் மதுரையை அடுத்த திருமங்கலம் மொட்டை மலை என்னும் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்னும் கல்லூரி மாணவன் ப்ளூ வேல் ஆன்லைன் விளையாட்டில் இருக்கும் போது திடீரென மன அழுத்தம் ஏற்பட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து உயிர் விட்டார்.

காவல்துறை விசாரணையின் பின் அந்த மாணவர் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததாகவும் இவர் இந்த விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் விளையாடி அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தனது தாயின் புடவையை எடுத்து தூக்கு போட்டு கொண்டுள்ளார்.

No comments