பிக்பாஸில் நுழையும் இளைய தளபதி விஜய்
பிக்பாஸில் நுழையும் இளைய தளபதி விஜய்
நடிகர் கமல் முதல் முறையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி வெளியாவதற்கு முன்னரே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது. வெளியான பின்னரும் இதில் ஒரு மாற்றமும் இல்லை. மக்கள் பலர் நாடகம் போன்று இதை பற்றியும் தினமும் கதை கதைக்கின்றனர். பிக்பாஸில் யார் வெளியேறுவார் யார் புதிதாக உள் நுழைவார் என மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கொண்டு சென்றுள்ளது விஜய் டிவி.இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸில் 100-வது நாள் நிறைவு விழாவிற்கு இளைய தளபதி விஜய் சிறப்பு விருந்தினராக வருகை தர இருப்பதாகவும், வெற்றியாளர்க்கு வெற்றி பரிசை வழங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமில்லாமல் மேலும் பல திரையுலக பிரபலங்களுக்கு கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தளபதி விஜயின் வருகை பற்றிய தகவல் எத்தகைய அளவிற்கு உண்மை என்பது இன்னும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை பற்றிய உங்களது கருத்துக்களை எங்களுக்கு கமெண்ட் பண்ணவும். நன்றி.

Post a Comment