மரணத்தை அழைக்கும் ப்ளூ வேல் , தப்பித்த இளைஞரின் தகவல்.

மரணத்தை அழைக்கும் ப்ளூ வேல் , தப்பித்த இளைஞரின் தகவல்.


ப்ளூ வேல் என்னும் ஆன்லைன் விளையாட்டு உலகையே அச்சுறுத்தி கொண்டு இருக்கிறது.
இவ்விளையாட்டினால் 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் காரைக்காலை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் (அலெசண்டேர்) தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
அந்த நபருடைய நண்பர்களின் வாட்சப்ப் வழியாக ப்ளூ வேல் விளையாட்டின் லிங்க் கிடைத்து இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் இந்த விளையாட்டினை தொடங்கியுள்ளார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்று தனிமையாக சுற்றியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த அவரின் சகோதரர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய சோதனையின் போது அவர் ப்ளூ வேல் விளையாடுவது தெரிய வந்தது. பின்னர் அந்த நபருக்கு கவுன்சலிங் அளித்தனர்.

ப்ளூ வேலை பற்றி அலெசண்டேர் கூறியதாவது, என் நண்பர்கள் வாயிலாக நான் ப்ளூ வேல் விளையாட்டை துவங்கினேன் என்றும் இந்த விளையாட்டை துவங்கிய பின் நான் வேலைக்கும் செல்ல வில்லை என்றும் கூறினார்.

மேலும் இந்த விளையாட்டு ஆப் இல்லை என்றும் இது நமக்காக அட்மினால் வடிவமக்கப்படும் ஒரு லிங்க் ஆகும். இதனை விளையாட துவங்கினால் மனரீதியாக கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அந்த அட்மின் சொல்வதை கேட்க வேண்டும் என்னும் முடிவுக்கு வந்துவிடுவோம் என்று கூறுரியுள்ளளார்

மேலும் எனது சகோதர் கொடுத்த தகவலினால் தான் இப்போது இயல்பு நிலையில் இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.


News by :- E1media

No comments