அடித்து நொறுக்கப்பட்ட மெர்சல் கட்-அவுட். மெர்சல் ட்ரைலர் ரிலீஸ் தேதி.


அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் மெர்சல். படக்குழுவினர்கள் சென்ஸார், டைட்டில் என பல பிரச்சனைகளில் பிஸியாகவே உள்ளனர்.

இந்நிலையில் ரசிகர்கள் தங்களுடைய தளபதிக்கு பேனர், போஸ்ட்டர் என தமிழகம் முழுவதும் கலக்கி கொண்டிருக்கின்றனர். தளபதி விஜய்க்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவிலும் நல்ல ரசிகர்கள் பலம் உள்ளது.

இந்த படத்தை உலகம் முழுவதுமாக 3000 திரையரங்குகளில் வெளியிடு செய்யலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.இதிழும் இலங்கையில் இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே  அதிக திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளதாம். மெர்சல் படத்தின் கட் அவுட் 60 அடியில் விஜய் ரசிகர்களால் வைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி போஸ்டர், கட்-அவுட் என கொண்டாடி வரும் வேளையில்,தற்போது வெளிவந்துள்ள ஒரு செய்தி விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது.
இந்த பேனர் நேற்று சிலரால் அடித்து உடைக்கபட்டுள்ளது. இதற்கு அருகில் இருந்த பேனரும் கிழிக்க பட்ட நிலையில் இருந்ததை கண்ட விஜய் ரசிகர்கள் செம்ம கோபத்தில் உள்ளனர்.

மெர்சல் படம் பல பிரச்சனைகளில் தற்போது சிக்கியுள்ளது. ஏற்கனவே பெயர் பிரச்சனை ஒரு பக்கம் இருக்க, தற்போது கேளிக்கை வரியால் தீபாவளி முதல் திரையரங்கை மூடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இப்படி பல்வேறு தடைகள் மெர்சல் படத்துக்கு இருந்தாலும், படக்குழு அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தங்கள் வேலைகளில் பிஸியாகவுள்ளனர்.

ஆம், மெர்சல் சென்ஸார் வருகின்ற 9-ம் தேதி திங்கள் அன்று நடக்கவுள்ளதாக கூறப்படுகின்றது, அதை தொடர்ந்து 10 அல்லது 11-ம் தேதிகளில் படத்தின் ட்ரைலரும் வரும் என கூறுகிறார்கள்.

முன்னதாக, தீபாவளிக்கு வெளியாகவுள்ள மெர்சல் திரைப்படத்தை கொண்டாட்டத்துடன் வரவேற்க ப்ளக்ஸ், பேனர்கள் என ரசிகர்கள் இப்போதே தயாராகி வருவது குறிப்பிடதக்கது.

No comments