பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதிக்கு திருமணமா.?
பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதிக்கு திருமணம்
தமிழ் சினிமா மட்டுமின்றி அனைத்து சினிமா துறைகளிலும் பல பிரபலங்கள்,மற்றவர்களின் துணையுடன் தொடங்கி இன்று தனது திறமையால் ஒரு தனி இடத்தை பெற்றுள்ளனர். சிலர் மற்றவர்கள் மூலம் திரைக்கு வந்தும் அதனை பயன் படுத்த தெரியாமல் தோல்வியை சந்திக்கின்றனர்.
ஆனல் இதிலும் மிக சிலரே யாருடைய துணையும் இன்றி தனது திறமை மீது நம்பிக்கை வைத்து வாழ்க்கையில் பல இன்னல்களை கடந்து சாதனை படைக்கின்றனர்.இது போல பல கஷ்டங்களை கடந்து சரித்திரதில் இடம் பிடித்தவர் தான் ஹிப் ஹாப் தமிழா என்னும் ஆதி.இன்று இவர் தமிழில் மிக முக்கியமான இசை அமைப்பாளர்களில் ஒருவர். இன்னும் சொல்ல போனால் கோவைக்கு இவர் மூலம் மேலும் பெருமை சேர்த்துள்ளார்.
அண்மையில் இவர் இயக்கிய மீசைய முறுக்கு படம் வெளியாகி இளைஞர்களிடம் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்து அமோக வெற்றி பெற்றது.இந்த நிலையில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கு ஏற்றார் போல் ஆதி மணக்கோலத்தில் ஜோடியாக இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது அது மற்றுமின்றி அவருடைய ட்விட்டர் பக்கத்திலும் இதனை பற்றி மறைமுகமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, இனிமேலும் நான் சிங்கிள் கிடையாது என்றும் உங்கள் அனைவரின் ஆசியும் எனக்கு தேவை என்றும் பதிவிட்டுள்ளார்.இந்த அனைத்து தகவல்களையும் வைத்து பார்க்கும் போது இது உண்மை என்பது தெரியவருகிறது.
Tags: hip hop adhi ,hip hop thamizh
Post a Comment