அஜித்தின் விஸ்வாசம் படத்தின் பாடல்.
விஸ்வாசம்: சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனத்தை பெற்ற போதிலும் வசூலில் பல சாதனையை படைத்துள்ளது என்பதில் மாற்று கருத்தே இல்லை.
இதற்க்கு பின்னர் சிவா அஜித் கூட்டணி மீண்டும் கூடி தல 58 படம் உருவாக போவதாக தகவல் வெளியானது பின்னர் அது விஸ்வாசம் என்ற தலைப்பை வெளியிட்டு அதனை படக்குழுவினர் உறுதிபடுத்தி விட்டனர்.
விஸ்வாசம் என்ற இந்த தலைப்பு தல அஜித்துக்கு ஏற்றால் போல் இல்லை என்று சினிமா ரசிகர்கள் ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாலும் மற்றொரு பக்கம் தல அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த கொண்டத்தின் ஒரு பகுதியாக தல ரசிகர்கள் போஸ்டர் அடித்தும், விஸ்வாசம் என்ற தலைப்பை போல் முடியை கட் செய்தும் சமூக வலைத்தளங்களில் புகைப்படதை வெளியிட்டு இருந்தனர். மற்றொரு பகுதியாக ரசிகர்கள் சிலர் தல அஜித்துக்காகவும்,விஸ்வாசம் என்ற தலைப்புக்காகவும் ஒரு பாடலினை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். அந்த பாடல் இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ரசிகர்களால் உருவாக்கப்பட்ட அந்த பாடல் இங்கே:
Tag : visvaasam song
Post a Comment