நம்மை பற்றி நாம் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்
நம்மை பற்றி நாம் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்
நமது அன்றாட வாழ்க்கையில பல விஷயங்களை பற்றி நாம தெரிஜிக்க நாம் அதிகமாக வே ஆர்வம் காட்ரோம்,அதுபோல் நம்மை பத்தி நாம தெரிஞ்சிக்காத பல சுவாரஸ்யமான தகவல்களை பத்தி தான் இந்த கட்டுரையில் பாக்க போகிறோம்.
- நாம் தூங்கும்போது, சுமார் 8 மிமீ அளவு வரை வளர்கிறோம்.அடுத்த நாள் காலை நமது பழைய உயரத்திற்கே மீண்டும் சுருங்கி விடுகிறோம். காரணம், நாம் நிற்கும்போது அல்லது அமர்ந்திருக்கும் போது ஈர்ப்பு விசையின் ஈர்ப்பு காரணமாக நம்முடைய உயரம் சுருங்கிவிடுகிறது..
- நம்முடைய பற்கள் சுறாவின் பற்களை விட வலிமையானது.
- இந்த உலகிலேயே நமக்கு மட்டும் தான்,அதாவது உலகில் உள்ள உயிரினங்கலிலே மனிதர்களுக்கு தான் வெட்கப்பட தெரியும்.
- குழந்தைகளுக்கு பிறந்த ஒரு மாத காலம் வரை அழும் போது கண்ணீர் வருவதில்லை.
- நமது மூக்கு 1 டிரில்லியன் வித்தியாசமான வாசனைகளை வேறுபடுத்தி நுகர முடியும்.
- நம்முடைய சுண்டு விரலை நாம் இழந்தோம் என்றால் கூடவே நம்முடைய கையின் 50 சதவிகித வலிமையையும் இலந்துவிடுவோம்.
- நமது உடலில் உள்ள அனைத்து DNAகளையும் எடுத்து நீட்டினோம் என்றால்,அது இந்த பூமியில் இருந்து புளூட்டோ வரை சென்று மீண்டும் பூமிக்கு பூமிக்கு வந்துவிடும்.
- பதினெட்டு வயதிலேயே நமது மூளை வளர்வதை நிறுத்திவிடுகிறது.
- ஒரு சாதாரண மனிதனால் 20 நாட்களுக்கு சாப்பிடாமலும்,இரண்டு நாட்கள் நீர் அருந்தமலும் உயிர் வாழ முடியும்.
- மனித மூளையிலிருந்து நரம்புகள் வழியாக வரும் தகவல்கள் மணிக்கு 322 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கின்றன.
- எவ்வாறு ஒவ்வொரு மனிதருக்கும் கைரேகை மாறுபடுகிறதோ,அதே போல் ஒவ்வொரு மனிதருக்கும் நாக்கின் வரிகள் மாறுபடும்.
- நாம் நமது மொத்த வாழ்நாட்களில் தோராயமாக ஐந்து வருடங்களை சாப்பிடுவதற்கு செலவிடுகிறோம்.
- ஒரு மனிதரின் வாயில் இருக்கும் பக்டிரியக்களின் எண்ணிக்கை மட்டும் இந்த உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையை காட்டிலும் அதிகம்.
வீடியோ:
இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..!
- இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
- youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.

Post a Comment