விஜய் 62ல் அப்படி ஒன்றும் இல்லை.படக்குழுவினர்.
விஜய் 62ல் அப்படி ஒன்றும் இல்லை.படக்குழுவினர்.
விஜய் அடுத்த முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப்போவது உறுதியாகிவிட்டது. துப்பாக்கி, கத்தி படங்களுக்கு பிறகு மீண்டும் இருவரது கூட்டணி தொடர்கிறது. வரும் 2018 முதல் ஷூட்டிங் ஆரம்பமாகவுள்ளது.
அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான மெர்சல் படம் மிக பெரிய வெற்றியை பெற்று ரசிகர்களையும் , படக்குழுவினர்களையும் சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பல வசூல் சாதனைகளையும் செய்துள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்ற தகவல் நாம் அனைவக்கும் தெறியும். விஜய், முருகதாஸ் கூட்டணியால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது என்றும் நமக்கு தெரியும்.
| Vijay |
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் வரும் 2018ல் ஜனவரி மாதம் தொடங்குகிறது. சமூக வலைத்தளங்களில் இந்த படத்தினை பற்றிய தகவல்கள் தான் சில நாட்களாக ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது. இப்படத்தை பற்றி வெளியாகும் தகவல்கள் சில உண்மை என்ற போதிலும் பல பொய்யான தகவல்களை வெளியாகியுள்ளது.
| Vijay with murugadoss |
குறிப்பாக இந்த படத்தில் விஜய் இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார் எனவும் அதில் ஒன்றில் அவர் மாற்றுதிறனாளி போல் நடிக்கிறார் என சொல்லப்பட்டது. மேலும் பல தகவல்கள் இதே போன்று வெளியாகி கொண்டிருந்தது.
தற்போது படகுழுவினர் இது போன்ற தகவல்களை முற்றிலுமாக மறுத்துள்ளது. அது போன்ற தகவல்கள் அனைத்தும் வதந்திகளே, இவற்றை யாரும் நம்ப வேண்டாம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளது. இதில் இருந்து இதுப்போன்ற தகவல்கள் வதந்திகள் என தெரிகிறது.
இந்த தகவல் பற்றிய உங்களது கருத்துக்களை கமெண்ட் பகுதியில் பதிவிடவும்.
இது போன்ற பல சினிமா சார்ந்த தகவல்களை பெற எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
Post a Comment