தல,தளபதியை நெருங்கும் சிவ கார்த்திகேயன்
தல,தளபதியை நெருங்கும் சிவ கார்த்திகேயன்.
சின்னத்திரையில் இருந்து தனது திறமையாலும் கடின உழைப்பாலும் இன்று வெள்ளி திரையில் ஒரு முன்னணி நடிகராக இடம் பெற்றவர் என்றால் அது சிவ கார்த்திகேயன் தான்.இவரது முதல் படத்தில் இருந்தே தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து கொண்டவர்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி போல நல்ல படங்களை தேர்வு செய்து அதில் அதிகமான வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன்.தளபதி விஜய்க்கு பிறகு அதிக குழந்தை ரசிகர்களை பிடித்து கொண்டவர் என்றும் சொல்லலாம்.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வெளிவர காத்து கொண்டிருக்கும படம் வேலைக்காரன்.இந்த படத்தில் சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.இந்த படம் வருமகின்ற 22-ம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாக வெளியாகிறது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த படம் தமிழ் நாட்டில் வியாபாரம் செய்தது மட்டும் ரூ60 கோடிக்கும் மேல் என செய்திகள் வெளிவந்துள்ளது.சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் வியாபாரம் தல,தளபதிக்கு இணையாக நடைபெற்றிருப்பதால் படக்குழுவினரும், ரசிகர்களும் சந்தோசத்தில் உள்ளனர்.
இதை வைத்து பார்க்கும் போது சிவ கார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மேலும் பல படிகளை கடந்து விட்டார் என தெரிகிறது.
- இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதில் பதிவிடவும்.
- மேலும் இது போன்ற பல சினிமா சார்ந்த தகவல்களை உடனுக்குடன் பெற இப்போதே எங்களை பின்தொடருங்கள்.நன்றி.
Post a Comment