மெர்சலை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு சென்ற தானா சேர்த்த கூட்டம்

நடிகர் சூர்யாவின் அஞ்சான்,மாசு என்ற மாசிலாமணி, 24 போன்ற படங்கள் தொடர் தோல்வியினை பெற்றது,இந்த தோல்வி சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது.இதற்கு பின்னர் வெளியான சிங்கம் 3 படம் ரசிகர்களை கொஞ்சம் ஆறுதல் படுத்தியது என்ற போதிலும் ஒரு தரமான படமாக அமையவில்லை என்பது ரசிகர்களின் ஒரு மன குறையாக இருந்தது.
இதன் காரமாகவே ரசிகர்கள் சூர்யாவின் அடுத்த படத்தின் மீது அதிகம் எதிர்பார்ப்பும்,நம்பிக்கையும் வைத்திருந்தனர்.தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியான நாள் முதல், ரசிகர்கள் படத்தின்டீசர் மீதும் படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி சூர்யா ரசிகர்களிடம் மட்டுமின்றி பொதுவான சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதேபோல் இப்படத்தின் இரண்டாவது போஸ்டரும் இவர் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அப்படி இவர் ஷேர் செய்த இப்படத்தின் இரண்டாவது போஸ்டர்  ட்விட்டரில் ஒரு சாதனை செய்துள்ளது.
அதாவது இந்தியாவிலேயே அதிக அளவில் ரீ-ட்விட் செய்யப்பட்டது நடிகர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இரண்டாவதாக வெளியிடப்பட்ட போஸ்டர் தான் என்று ட்விட்டர் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்த சாதனையின் மூலம் முதல் இடத்தில் இருந்த மெர்சல் ஒரு படி இறங்கி இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments