பொங்கல் தின சிறப்பு திரைப்படங்கள் இதோ.

பொங்கல் தின சிறப்பு திரைப்படங்கள் இதோ.

தீபாவளி,பொங்கல்,சுதந்திர தினம் போன்ற பண்டிகை நாட்கள் வந்தாலே நாம் எப்படி புத்தாடை எடுப்பதற்கும் பலகாரங்கள் உண்பதற்கும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோமோ அதே போல் எந்த தொலைக்காட்சிகளில் எந்த படம் ஒளிபரப்புவார்கள் என்பதற்கும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.
தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் ஒரு ஆண்டிற்கு 150க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன.அவைகளில் சில படங்களே வெற்றியை பெறுகிறது மற்ற படங்கள் எல்லாம் தோல்வியை பெறுகிறது.இதில் பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படமும் இடம்பெறுகின்றன.



முன்பெல்லாம் திரைக்கு வந்து தோல்வியடைந்த படங்களை தான் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள்.வெற்றி படங்களை எல்லாம் வெகு நாள் கழித்து தான் ஒளிபரப்புவார்கள்.ஆனால் இப்போது அந்த நிலை எல்லாம் மாறி திரைக்கு வந்து சில மாதங்களே ஆன சூப்பர் ஹிட், மெகா ஹிட் படங்கள் எல்லாம் தொலைக்காட்சிகளில் விரைவிலேயே ஒளிபரப்பு செய்துவிடுக்கிறார்கள்.இதெற்கெல்லாம் ஓரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், மற்றோரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் இடையே ஏற்படும் TRP போட்டி தான் காரணம்.இது,எப்படியோ நமக்கு சாதகமகிறது.


இதோ பிரபல தொலைக்கட்ச்சியில் ஒளிபரப்பப்படும் படங்கள் விவரம்.
சன் தொலைக்காட்சியில் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் ஒளிபரப்ப இருக்கிறது.அதே போல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து இந்த வருடத்தின் மா பெரும் வெற்றிப்படமான மெர்சல் படமும் ,விஜய் தொலைக்காட்சியில் வினோத் இயக்கத்தில் கார்த்திக் நடித்து பல பாராட்டுகளை பெற்ற தீரன் அதிகாரம் ஓன்று படமும் ஒளிபரப்பபட இருக்கிறது.

இந்த பொங்கலுக்கு எந்த படத்தை காண ஆவலாக இருக்கிறீர்கள் என்று கமெண்ட் பகுதியில் கமெண்ட் பண்ணுங்க.

மேலும் இது போன்ற பல சினிமா சார்ந்த தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.

No comments