அஜித் ரசிகர்களின் செயலுக்கு குவியும் வாழ்த்துக்கள்

அஜித் ரசிகர்களின் செயலுக்கு குவியும் வாழ்த்துக்கள்



தற்போது தமிழகத்தில் உள்ள மிக பெரிய நடிகர்கள் என்றால் அது தளபதி விஜய் மற்றும் தல அஜித் மட்டும் தான்.இவர்கள் இருவரும் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார்கள்.இன்று தமிழ் சினிமாவில் கடும் போட்டி நிலவுகிறது என்றால் அது விஜய் மற்றும் அஜித்துக்கு தான்.இவர்கள் தமிழ் சினிமாவில் போட்டி போடுகிறார்கள் என்றால் இவர்களுடைய ரசிகர்கள் நற்பணிகள் செய்வதில் மிகுந்த போட்டி போடுகின்றனர்.
இதில் அஜித் ரசிகர்கள் என்றாலே அஜித்தின் பெயரை கொண்டு பல நற்பணிகளை செய்துள்ளனர்.அதாவது ஏழை எளிய மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரி படிப்புக்கு வழி செய்து கொடுப்பது, ரத்த தானம்,அதரவற்றோருக்கு உணவு உடைகளை பரிசளிப்பது என பல வகைகளில் உதவி செய்துள்ளனர் என்பது நமக்கு தெரிந்ததே.


அதேபோல் அஜித் ரசிகர்கள் அஜித் மகள் அனோஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பல நற்பணிகளை செய்துள்ளனர்.குறிப்பாக சிவகாசியில் உள்ள அஜித் ரசிகர்கள் அதரவற்று ரோட்டில் ட்தங்கி இருப்போருக்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உணவு,உடை போன்ற பொருட்களை வழங்கி அவர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளனர்.அஜித் ரசிகர்களின் இந்த செயல் பலரையும் கவர்ந்துள்ளது.மேலும் பலர் இந்த செயலுக்கு பாராட்டு தெரித்துள்ளனர்.
அஜித் ரசிகர்களின் இந்த செயல் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் பண்ணுங்க.


No comments