அதிக லாபம் பெற்ற இந்திய படங்கள்.அஜித், விஜய்க்கு இடமிருக்க.

அதிக லாபம் பெற்ற இந்திய படங்கள்.அஜித், விஜய்க்கு இடமிருக்க.


இந்திய சினிமாவின் வர்த்தகத்தை பொறுத்த வரை முன்னிருந்த நிலையை விட தற்போது நல்ல வரவேற்பையும் வளர்ச்சியையும் சந்தித்துள்ளது என்று சொல்லலாம்.ஏனென்றால் அந்த அளவிற்கு இந்திய திரைபடங்கள் பல நாடுகளில் நல்ல வசூளையும் நல்ல லாபத்தையும் பெற்று தந்துள்ளது.
அதன்படி கடந்த வருடம் குறைத்த பட்ஜெட்டில் உருவாகி அதிக லாபத்தை பெற்று தந்த சில இந்திய படங்களை பற்றி தான் இந்த கட்டுரை..

தங்கல்
நிதேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியான படம் தங்கல்.இந்த படம் வெறும் 70 கோடியில் எடுக்கப்பட்ட படம்.ஆனால் இதன் மொத்த வசூல் 2000 கோடிக்கும் மேல்.இதனால் தங்கல் படத்தினை வாங்கிய மற்றும் திரையிட்ட அனைவருக்கும் அதிக அளவில் லாபம் ஈட்டியத்தில் முதலிடத்தில் உள்ளது

பாகுபலி-1 மற்றும் பாகுபலி-2
ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி இந்திய சினிமாவையே அதிரவைத்த படம் பாகுபலி இந்த படம் இந்தியாவில் மட்டுமே ரூ1000 கோடி பங்கினை பெற்றுள்ளது.மேலும் அமெரிக்காவிலும் ரூ100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் பட்ஜெட் காரணமாக இப்படத்தின் லாபம் தங்கல் படத்தை காட்டிலும் கொஞ்சம் குறைவுதான்.

சாய்ராட்
மராத்திய படங்களை பொறுத்த வரை எப்போதும் தரமான படங்கள் அதிகம் வெளிவரும்,ஆனால் அதற்கு யாரும் முக்கியதுவம் கொடுப்பதில்லை.இந்த வரிசையில் வெளியான படம் தான் சாய்ராட்.இந்த படம் வெறும் ரூ 4 கோடியில் தயாராகி 110 கோடி வசூல் செய்து ஆச்சரியபடுத்தியுள்ளது.

ஃபிடா (Fidaa)
தெலுங்கு படங்களை பொறுத்த வரை எல்லா படங்களும் அதிக வசூல் செய்து எடுக்கப்படும்,ஆனால் அதிக வெற்றி பெறுவதில்லை. வருன்தேஜ் ,சாய் பல்லவி நடிப்பில் வெளியான இந்த படம் ரூ13 கோடி செலவில் வெளியாகி ரூ90 கோடிவரை வசூல் செய்து அனைவருக்கும் நல்ல லாபத்தை தந்துள்ளது.

விக்ரம் வேதா
சென்ற வருடம் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட படம் என்றால் அது விக்ரம் வேத தான்.இப்படம் ரூ 11 கோடியில் எடுக்கப்பட்டு ரூ 70 கோடி வரை வசூல் செய்து நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.
தமிழில் மெர்சல், வேதாளம்,கபாலி போன்ற படங்கள் பெரிய வசூல் வேட்டை நடத்தினாலும் அதன் பட்ஜெட் காரணமாக குறைத்த லாபத்தையே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..
  • இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
  • youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.

No comments