ஜெயம் ரவியிடம் தல அஜித் கேட்ட விஷயங்கள்
ஜெயம் ரவியிடம் தல அஜித் கேட்ட விஷயங்கள்
தமிழ் சினிமாவில் தனது உடலை கட்டாக வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.தனது முதல் படமான ஜெயம் படத்திலிருந்து ரசிகர்களை தனது வித்யாசமான நடிப்பினால் கவர்ந்தவர்.தற்போது இவர், இந்தியா முழுவதும் யாரும் தேர்வு செய்யாத கதை களத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
எடுத்துக்காட்டாக இவர் நடித்த மிருதன் படம் தான் இந்தியாவின் முதல் ஜூம்பி படம்.அதுமட்டும் இல்லாமல் தற்போது நடித்து கொண்டிருக்கும் டிக் டிக் டிக் படமும் இந்தியாவின் முதல் ஸ்பேஸ் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவி சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் தல அஜித்தை பற்றி ஒரு செய்தியையும் பதிவு செய்தார்.
ஜெயம் ரவி கூறியதாவது “ அஜித் சார் தமிழ் சினிமாவில் எவ்வளவு உயரத்தில் இருக்கின்றவர்,ஆனால் அவர் நான் பேராண்மை படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது அஜித் சார் என்னிடம் உடலை எவ்வாறு கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்று என்று நிறைய தகவல்களை குறிப்பாக எடுத்து கொண்டுடிருக்கிறார் என்றும், அதன் படி அவர் விவேகம் படத்தில் அதனை வெளிப்படுத்தியும் உள்ளார் என்று தலயை பற்றி பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் ஜெயம் ரவி கூறி இருந்தார்.
இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..
- இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
- youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.
Post a Comment