விண்வெளியில் வீரர் இறந்தால் உடலை என்ன செய்வார்கள் தெரியுமா.
விண்வெளியில் வீரர் இறந்தால் உடலை என்ன செய்வார்கள் தெரியுமா.
நம்முடைய சிறிய வயது பருவம் முதல் தற்போது வரை நாளுக்கு நாள் புதிய புதிய கேள்விகள் நம் மனசுக்குள் எழுந்து கொண்டே இருக்கும், இது ஒவ்வொறொவருடைய மனநிலையை பொறுத்து மாறுபடும்.நாம் சிறிய வயதில் இருக்கும் போது வானொலியில் இருந்து எப்படி சத்தம் வருகின்றது.? தொலைக்காட்சியில தெரிகின்ற மனிதர்கள் எல்லாரும் அதற்குள் இருப்பார்களோ.?
இப்படி பல கேள்விகள் நமக்குள் நாமே கேட்டிருப்போம்.அது போல் எல்லாருடைய மனதிலும் எழக்கூடிய பொதுவான கேள்வி தான் “ விண்வெளியில் விண்வெளி வீரர் இறந்து போன அவர்களுடைய உடலை என்ன செய்வார்கள் என்று..?
அதற்கான பதிலை தான் இந்த கட்டுரையில் காண போறோம்.
| Astronaut |
விண்வெளி வீரர்களுடைய இறப்பு பெரும்பாலும் விண்கலம் புறப்படும் போது
,தரை இறங்கும் போதும் தான் ஏற்படுகின்றது.
இதை தவிர்த்து ஒருவர் விண்வெளியில் இறந்து விட்டார் என்றால் அவருடைய உடலை பூமிக்கு கொண்டுவருவதற்கு பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றது.
1.இறந்தவரின் உடலை விண்கலத்தில் வைக்க முடியாது.அவ்வாறு வைத்தால் இறந்தவரின் உடலில் இருந்து வெளிப்படும் பாக்டீரிவால் அங்குள்ள யாருக்கும் உடல் நிலை சரியில்லாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
2.அவருடைய உடல் பூமி வருவதற்குள் அழுகி போய்விடும்.
3.அவருடைய உடலை அங்க அடக்கம் செய்வது சாத்தியம் இல்லாதது.
4பிறகு அவருடைய உடலை அங்கேயே விட்டுவிட்டும் வர முடியாது.ஏனென்றால் விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததால் அந்த உடல் விண்வெளியில் சுற்றிகொண்டு இருக்கும் .
| Space astronaut |
இதற்கு ஒரு இயந்திரத்தை Swedish என்ற நிறுவனம் கண்டுபிடித்து கொடுத்தது.
இறந்தவரின் உடலை உறைய வைத்து பொடியக்குவது தான் அந்த இயந்திரத்தின் வேலை.அந்த இயந்திரத்தின் பெயர் தி படி பேக் (the body back).
| The body back |
இந்த இயந்திரத்தில் இறந்தவர்களுடைய உடலை உரையவைத்து தொடர்ந்து குலுக்கி கொண்டே இருக்கும் போது 1மில்லியனுக்கும் அதிகமான சத்தையுடன் கூடிய பனிக்கட்டி துண்டுகாளாக பிரிந்துவிடும்.மேலும் 90 கிலோ இருக்கக்கூடிய உடல் வெறும் 20 கிலோவாக குறைந்துவிடும். இப்படி செய்வதன் மூலம் பல வருடங்களுக்கு அந்த சிதைந்த உடலை நமது விண்கலத்தில் வைத்து கொள்ள முடியும்.நாம் மீண்டும் பூமிக்கி வரும் போது இதனை எடுத்து கொண்டு வர முடியும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் கமெண்ட் பகுதில் கமெண்ட் பண்ணுங்கள். நன்றி.
- மேலும் இது போன்ற தகவல்களை பெற எங்களை பின் தொடருங்கள்.
- Youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.
Post a Comment