உலகம் வியக்கும் இந்தியர்களின் கண்டுபிடிப்பு பற்றி தெரியுமா.

இன்றைய நவீன உலகத்தில் தினமும் பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து கொண்டுதான் இருக்கின்றனர்.இதில் மற்ற நாடுகள் முன்னிலையில் இருக்கின்ற அதே வேளையில் இந்திய மிகவும் பின்நிலையில் இருக்கின்றது.

ஆனால் இன்றைக்கும் இந்த உலகத்திற்கு பயன்படுகின்ற பண்டைய இந்தியர்களின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளை தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.


பொத்தான்
இன்றைக்கு உலக மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு இருக்கின்ற பட்டன்களை சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த இந்திய மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்திருக்கின்றனர்.ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்னரே மொகஞ்சதாரோ காலத்தில் இந்த பொத்தான்களை  பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

ஷாம்பூ!
பண்டைய இந்தியாவில் பல இயற்கை மூலிகைகளில் இருந்து எடுக்கப்பட்ட சாறுகளை இந்தியர்கள் தலைக்கு ஷாம்பூவாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

ஃபிபனாச்சி தொடர்!
தற்போது ஃபிபனாச்சி தொடர்கள் என்று அழைக்கபடும் இந்த தொடர்களை வடமொழியில் 'சந்தஸ் சாஸ்திரம்' என்று பிங்களர் எழுதிய நூலில் 'மாத்ரா மேரு' என்ற பெயரில் கிமு 3மூன்றாம் நூற்றாண்டுகளிலேயே குறிப்பிடபட்டுள்ளது.


பிளாஸ்டிக் சர்ஜரி!
உலகில் மிகவும் ஆச்சரியமான ஒரு மருத்துவமுறையாக பார்கப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி இந்தியர்களால் தான் கண்டுபிடிக்கப்பட்டது. கிமு 2000 -யிலேயே இந்தியாவின் நிபுணர் சுஷ்ருதா இந்த சிகிச்சை பற்றி நுட்பங்கள் எழுதிவைத்துள்ளார்.

மை.
இன்றும் பெருப்பாலோரால் உபயோக்கிய படும் மை-யினை இந்தியர்கள் நான்காம் நூற்றாண்டிலேயே கண்டுபிடித்துள்ளனர்.எரிக்கப்பட்ட எலும்புகள், தார், நிலக்கரி மற்றும் இதர பொருள்களை கொண்டு மை தயாரித்து மாசி என பெயரிட்டுள்ளனர்.


ஃப்ளஷ் கழிவறைகள்

மொகஞ்சதாரோ - ஹரப்பா காலத்தில் கட்டமைக்கப்பட்டிருந்த நகரமைப்பில் இந்தியர்கள் நீர் ஊற்றி கழுவப்படும் கழிவறைகள் பயன்படுத்தியுள்ளனர். இதுவே உலகில் முதல்ஃப்ளஷ் கழிவறைகள்.

பூஜ்ஜியம்

ஒரு உலகம் போற்றும் கண்டுபிடிப்பான சுழியத்தை உலகத்திற்கு அறிமுகம் செய்ததே இந்தியர்கள் தான்.5ம் நூற்றாண்டுகளிலேயே ஆர்யபட்டா பூஜ்யத்தை கண்டுபிடித்தார்



பருத்தி சாகுபடி!

சிந்துசமவெளி நாகரீகத்தில் இருந்தே பருத்தி சாகுபடி இந்தியர்கள் செய்து வந்திருந்தது அறியப்படுகிறது. இங்கிருந்து தான் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு பருத்தி சாகுபடி முறை பரவி, அங்கிருந்து உலகம் முழுக்க பரவியிருக்கிறது.

மேலும் சதுரங்கம்,இழை ஒளியியல் மற்றும் நிலவில் தண்ணீர் இருப்பதையும் இந்தியர்கள் தான் கண்டுபிடித்திருக்கின்றனர்..

இதிலிருந்து சிந்துசமவெளி, மொகஞ்சதாரோ காலத்தில் வாழ்ந்த இந்தியர்கள் அறிவிலும், அறிவியலிலும் மேன்மையுடன் வாழ்ந்திருக்கின்றனர் என்று தெரிகிறது.இன்றும் இந்தியர்களுடைய கண்டுபிடிப்புகள் இந்த உலகத்தில் ஒரு புரட்சியாகவே இருந்துள்ளன.

இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..!
  • இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
  • youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்

No comments