நாம் பொய்யென்று நினைக்கும் உண்மையான புகைப்படங்கள்.

இந்த உலகில் பல வித்யாசமான பகுதிகள் இருக்கின்றது என நாம் அனைவரும் நம்புகின்றோம்.உலகில் பல இடங்களில் பல வித்தியாசமான பகுதிகள் இருக்கின்றது.இவை அனைத்திற்கும் நம்மால் சென்று பார்க்க முடியுமா என்றால் அது முடியாது,ஆனால் இவற்றை புகைப்படம் மூலமும் காணொளி மூலமும் கண்டு கொள்கிறோம்.அவ்வாறு பார்க்கும் போது சில புகைப்படங்கள் பொய்யானது போன்றெ தோன்றும்.அது போல் நாம் பார்த்தவுடன் பொய் என்று சொல்லும் சில உண்மையான பகுதிகளை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கபோகின்றோம்.

1.தி ஸின்க் ஹோல்
தி ஸின்க் ஹோல் (the sink hole ) என்று அழைக்கப்படும் இந்த பெரிய துளைகள் 60 அடி அகலமும் 200அடி நீளமும் கொண்டுள்ளது.இது குவாட்மாலா என்ற இடத்தில் இருக்கின்றது.

2.மேகாலயா, இந்தியா
மேகாலயவில் உள்ள இந்த ஏரியில் கண்ணாடி போல் தண்ணிர் இருப்பதால் இது பார்ப்பதற்கு பொய்யானது போன்று காட்சியளிக்கின்றது.

3.யுரேகா டவர் கார் பார்க்,மெல்போர்ன்
மெல்போர்னில் உள்ள யுரேகா டவர் கார் பார்க்கில் ஆப்டிகல் இல்லுசியன் தோற்றத்தில் வடிவமைக்கபட்டுள்ளது.

4.சௌஹு ஏரி, சீனா.
சீனாவின் உள்ள சௌஹு ஏரியில் அதிகமான அளவிற்கு பாசிகள் படர்ந்துள்ளதால்,இது பார்ப்பதற்கு போலியானது போன்று காட்சியளிக்கிறது.

5.வாட்டர் கோர்ட், கத்தார்
கத்தாரில் நீர்மேல் அமைந்துள்ள இந்த டென்னிஸ் மைதானத்தில் ரஃபேல் நடால் மற்றும் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் விளையடுவார்கள்.

6.கேண்டர்பரி, நியூசிலாந்து.
நியூசிலாந்தில் கேண்டர்பரி என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுகத்தின் காரணமாக இந்த ரயில் பாதைகள் வளைந்து காணப்படுகிறது.

7.ஜிப்ரால்டர் சர்வதேச விமான நிலையம்.
ஜிப்ரால்டரில் உள்ள சர்வதேச விமான நிலையதின் ஒடுபாதை சாலைகளுக்கு நடுவே அமைக்கபட்டுள்ளது. இது பார்ப்பதற்கு ஏதோ போட்டோஷாப் செய்தது போல் இருக்கும்,ஆனால் இதுவும் உண்மையான புகைப்படமே.

இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..!
  • இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
  • youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்

No comments