உலகில் மிகவும் வித்தியாசமான 10 தடைவிதிப்புகள்

ஓவ்வொரு நாடும் அந்த நாட்டின் சூழல் மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்ப சிலவற்றை தடைசெய்திருக்கும்.அது பெரும்பாலும் மக்கள் ஏற்று கொள்ளும்படி இருக்கும்.ஆனால் சில நாடுகள் மிகவும் வித்தியாசமான தடைகளை விதித்துள்ளது.
இவற்றை எல்லாம் சில நாடுகளில் தடை செய்தார்கள் என்று சொன்னால் நீங்கள் ஆச்சரியபடுவீர்கள்.வாங்க அவற்றை பார்க்கலாம்.

10. கிரீஸ்: வீடியோ கேம்ஸ்
2002லிருந்து கிரீஸ் நாட்டின் அரசாங்கம் வீடியோ கேம்ஸ் விளையாடுவதை தடை செய்துள்ளது.கிரீஸ் நாட்டில் உள்ள யாரும் சிறைக்கு செல்ல ஆசை பட்டால் அவர்கள் விடியோ கேம்ஸ் விளையடினாலே போதும்.

9. மலேசியா: மஞ்சள் ஆடை
மலேசியாவில் மஞ்சள் நிற ஆடை அணிவது சட்டப்படி குற்றம்.ஏனென்றால் அது அங்கு தடைசெய்யப்பட்டுள்ளது.அங்கு மஞ்சள் நிற ஆடைகள் அணிந்திருந்தாள் உங்களை அவர்கள் போராட்டகாரர்கள் என்று எண்ணிக்கொள்வார்கள்.இதனால் நீங்கள் சிறைக்கு செல்ல வாய்ப்புள்ளது.

8. டென்மார்க்: குழந்தைக்கு பெயரிடுதல்
டென்மார்க்கில் குழந்தைகளுக்கு பெயர்வைக்க வேண்டுமென்றால்,அரசு பட்டியலிட்டுள்ள 24,000 பெயர்களில் ஒன்றை தான் தேர்வு செய்ய முடியும்.உங்களுக்கு பிடித்த பெயரை நீங்கள் வைக்க விரும்பினீர்கள் என்றால் அங்கு தனியாக அனுமதி வாங்க வேண்டும்.

7.ஈரான்: மேற்கத்திய முடி அலங்காரங்கள்
ஈரானிய அரசு முழுமையாக மேற்கத்திய நாடுகளின் நடைமுறைகளையும் ,செயல்முறைகளையும் தடை செய்துள்ளது. அதில் ஒன்று தான் மேற்கத்திய தோற்றத்தில் முடி வெட்டுவதும்.

6. சீனா: மல்லிகை
சீன அரசு மல்லிகையை விற்பத்தையும்,வகற்பத்தையும் அதனை பற்றி பேசுவதையும் தடை செய்துள்ளது. மேலும் மல்லிகை என்ற வார்த்தையை சீன இணையத்தில் இருந்து மறைப்பதற்கு வேலை நடந்து கொண்டிருக்கிறது.

5.புருண்டி: ஜாகிங்
நீங்கள் காலையில் சாலையில் ஜாக்கிங் போனாலே போதும்,உங்களை அப்படியே சிறைக்கு தூக்கிகொண்டு சென்றுவிடுவார்கள்.ஆம்,அங்கு காலையில் ஜாக்கிங் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

4.பிரான்ஸ்: கெட்ச்அப்
இது வரை எந்த மாணவரும் பிரான்சில் கேட்ச்அப்பை சுவைத்தது இல்லை.ஆமாம்,பிரான்ஸ் நாட்டில் மாணவர்கள் மற்றும் இலைஞர்களுக்கு கேட்ச்அப் தடைசெய்யப்பட்டுள்ளது.

3.ஆஸ்திரேலியா: சிறிய மார்பக ஆபாசப்படம்
ஆஸ்திரேலியாவில் சிறிய மார்பகம் உடைய பெண்கள் ஆபாச படங்களில் நடிக்க தடை செய்துள்ளது. காரணம் சிறிய வயதுடைய மாணவர்களும் இதில் நடிக்க வாய்ப்புள்ளது என்பதற்காக.

2.சவுதி அரேபியா: பெண்களுக்கு மட்டும் தடை
சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.மேலும் பெண்கள் வேலைக்கு செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.மேலும் நிறைய தடைகள் பெண்களுக்கு அங்கு விதிக்கப்பட்டுள்ளது.

1.வட கொரியா: கிட்டத்தட்ட எல்லாம்
வட கோரியாவை பொறுத்தவரையில் அங்கு நிறைய விஷயங்களுக்கு தடை செய்யப்பட்ட்டுள்ளது.இங்கு டிவி பார்பது,பாட்டு கேட்பது,ப்ளூ ஜீன்ஸ் போடுவது,நாட்டை விட்டு வெளியேறுதல்,பொது இடங்களில் சிரிப்பது,மதங்களை நம்புவது மேலும் நிறைய விஷயங்கள் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.மேலும் வட கோரியாவை கொரிய என்று கூப்பிட்டால் நீங்கள் கட்டாயம் சிறைக்கு செல்வீர்கள்.

இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..!
  • இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
    y
  • outube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்

No comments