உலகில் அதிக ஆண்டுகள் வாழக்கூடிய உயிரினங்கள்.
இந்த மொத்த உலகில் 8.7 மில்லியன் உயிரினங்கள் உள்ளன.இவை ஒவ்வொன்றும் அதன் படைப்பிற்கேற்ப மற்றும் சூழலுக்கு ஏற்ப மாறுபட்டிருக்கும்.அதில் இவைகளின் வாழ் நாட்களும் மாறுபட்டிருக்கும்.அதன்படி உலகில் அதிக நாட்கள் உயிர்வாழ கூடிய டாப் 10 உயிரினங்களை பற்றி தான் நாம் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
10. மெக்காஸ்
மெக்காஸ் என்னும் இந்த கிளி வகைகள் 60 முதல் 80 ஆண்டுகள் வரை உயிவாழக்கூடியது.
9. ஆப்பிரிக்க யானைகள்
உலகின் மிக பெரிய விலங்கான ஆப்பிரிக்க யானைகள் சுமார் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது.
8.கலபகோஸ் மாபெரும் ஆமை
உலகின் மிகவும் பெரிய ஆமை வகை இது தான்.இந்த ஆமை வகைகள் 140 வருடங்களுக்கு மேல் உயிர் வாழும்.அதிகபட்சமாக 153 வருடங்கள் வாழ்ந்திருக்கிறது.
7. ஈல்ஸ்
கடலில் வாழும் இந்த ஈல் மீன்கள் 150 வருடங்கள் உயிர்வாழக்கூடியது.உங்களுக்கு ஒன்று தெரியுமா இந்த ஈல் மீன்கள் தன்னுடைய வாழ்நாட்களில் 40லட்ச முட்டைகளையிடும்.
6.டூடாரஸ்
டூடாரஸ் என்னும் இந்த உயிரினம் 180 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியது.
5.கோய்
கோய் என்னும் இந்த மீன்கள் 200 ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழும் தன்மை உடையது.
4.வில்தலை திமிங்கலம் (bowhead whale )
75 முதல் 100பல் டன் எடைகொண்டுள்ள இந்த வகை திமிங்கலங்கள் 200 வருடங்களுக்கு மேல் உயிர் வாழும்.
3. கிரீன்லாந்து சுறா
கிறீன்லாந்து சுறா என்று அழைக்கப்படும் இந்த சுறா வகைகள் 284 வயதுவரை உயிர்வாழும் தன்மை உடையது.
2.ஆர்க்டிகா தீனியா
இந்த உயிரினம் 500 வயது வரை உயிர் வாழும் தன்மை உடையது.
1.அழிவற்ற ஜெல்லிமீன்
உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லிகிறேன் இந்த வகை ஜெல்லி மீன்களின் ஆயுள்காலதில் முடிவே இல்லை.இவை உயிர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்.இவை இந்த புகைப்படதில் கொடுக்கப்பட்டது போல் சுழற்சி முறையில் உயிர்வாழ்ந்து கொண்டே இருக்கும்.
இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..!
- இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
- youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்
Post a Comment