சிரிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா.

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பது தமிழ் பழமொழி. இது நமது பொது வாழ்க்கைக்கு 100 சதவிகிதம் பொருந்த கூடியது.நம் அனைவர்க்கும் தெரியும் வாய்விட்டு சிரிப்பதன் மூலம் நோயை விரட்டலாம் என்று.அதன்படி நாம் சிரிப்பதால் நமது உடலுக்கு ஏற்படும் நன்மைகளை பற்றி தான் இந்த பதிவில் பட்டியலிட்டு பார்க்கப்போகிறோம்.
Laughing
1.நாம் அன்றாட வாழ்கைக்கு அத்தியாவசியமகா தேவைப்படும் ஆக்ஸிஜன்,நாம் வாய்விட்டு சிரிப்பதன் மூலம் நமது உடலுக்கு சீராக மற்றும் போதுமான அளவுக்கு ஆக்ஸிஜன் செல்கிறது.

2.நாம் சிரிக்கும் போது நமது தசைநார்கள் விரிவடைகிறது,இதனால் நமது முகத்தில் சுருக்கம் குறைந்து நம்மை அழகாக மாற்றுகிறது.

3.நம்முடைய இதய துடிப்பை சாதாரண நிலையில் வைத்துகொள்ள சிரிப்பு தேவைப்படுகிறது.

4.நாம் வாய்விட்டு சிரிக்கும் போது நம்முடைய உடல் வலி குறைகிறது,மேலும் நம்முடைய மனஅழுத்தம் குறைகிறது.

5.நாம் சிரிப்பதால் நம்முடைய இரத்தஓட்டம் அதிகரிக்கும் ,இதனால் நம்மை மாரடைப்பு மற்றும் இதயநோய்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ளமுடியும்.

6.சிரிப்பதால் நம்முடைய மூலையில் உள்ள எண்டோர்பின் என்னும் ஹார்மோன் சுரக்கிறது இதனால் நம்முடைய உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.

7.நீண்ட நேரம் நாம் சிரிப்பதன் மூலம் நமது உடலில் உள்ள கொட்ட கலோரிகளை குறைக்கலாம்.

8.நாம் அதிகமாக சிரிப்பதன் மூலம்,நமது உடலில் அதிக ஜீரண அமிலம் சுரந்து நமது உணவுகளை ஜீரணிக்கும்.

9.நாம் தொடந்து சிரிப்பதன் மூலம்,நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள முடியும்.

10.நாம் அதிகமாக சிரிப்பதன் மூலம் நாம் நமது உடல் எடையை குறைத்து கொள்ள வாய்ப்பு உள்ளது.

என்ன,இப்பவே நீங்கள் சிரிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..!
  • இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
  • youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்

No comments